வியாழன், 11 டிசம்பர், 2014

** மழையே மழையே.. **

** மழையே மழையே.. **

நேற்றிரவு முழுதும்,
விடாது கொட்டி தீர்த்த,
மழையை,
என் சன்னல் வழியே,
வேடிக்கை பார்த்து,
உறங்க மறந்து போனேன்..

நிசப்தம் கிழித்து,
சோவென்று பெய்த,
பெருமழையின் சாரல்கள்,
சன்னல் தாண்டி,
என் உடலை தீண்ட,
சிலிர்த்தேன்..

காதல் வயப்பட்ட,
மனது வேறு,
இன்னும் அழகாய்,
ரசனையாய்,
மழையை ரசிக்க
வைத்தது..

விடியலுக்கு சற்று முன்,
மழை நின்று போக,
ஏனோ மனமும் வாடி
போனது..

ஒரு வேகத்தில் எழுந்து,
இருள்பிரியா அதிகாலை,
பொழுதில்,
ஈரமாய் நனைந்த வீதியில்,
மழையின் மிச்சமாய்,
சிறு மழைதுளிகள் எனை நனைக்க,
ஆனந்த நடனமிட்டேன்,

"மழையே மழையே மீண்டும்,
ஒரு இரவில் வா..
நான் மகிழ்ந்திருக்க வேண்டும்.. "
மழை கவிதைகள் ,
பிறப்பெடுக்க ஆரம்பித்தன,
என்னுள்,..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக