புதன், 8 ஏப்ரல், 2015

நினைவுகளில்..


உன் மௌனமே
போதுமென்று
கூறியும், 
பிரிவுதிர் காலத்தில்,
எனை விட்டு
சென்று விட்டது
ஏன் பெண்ணே ?

*
உன்னை தேடி,
நிதமும்,
திரிகிறேன்,
எங்கெங்கோ...

**
அழகிய உணர்வுகளில்,
ஆர்ப்பரித்த மனது,
இன்று,
எங்கோ வெறிக்கிறது..

**
எனக்கொரு
அழகிய கனவு
இருந்தது..
ஒரு பிரிவுதிர் நாளில்,
என்னிலிருந்து
விடைபெற்றது
கனவு..

**
என்னை நான்
தொடர் சமாதானத்தில்,
ஈடுபடுத்தியும்,
சொல் பேச்சு கேளா
மனது,
எங்கோ தேடி திரிகிறது,
உன்னை..

**
காதலன்றி
ஒரு வாழ்வியலை
எட்டி பிடித்தும்,
காதல் நினைவுகளின்றி,
வாழ்ந்திட
இயலவில்லை..

**
யார் என்ன சொன்னாலென்ன,
காதல் சாகாது
என்றவள்,
மெல்ல காணாமல்
மறைந்து போனாள்..
*
பளிச்சென்று இன்னமும்,
என்
நினைவுகளில் இருக்கிறது,
உன் வட்ட முகமும்,
படபடத்த உன் விழிகளும்..

**
கடற்கரையில்
கடல் நீர் கால் நனைக்க,
வானம் வெறித்து,
கிடக்கிறேன்..
அமைதியாய் வேடிக்கை,
பார்க்கிறது,
முழு நிலவு..

**
எதுவோ,
என் வாழ்வும்
ஒரு நாள் தீர்ந்து,
கல்லறையில் முடியும்..
உன் நினைவுகளை,
சுமந்து,
என் கல்லறை
உறங்கி கொண்டிருக்கும்..