வியாழன், 11 டிசம்பர், 2014

** மழையே மழையே.. **

** மழையே மழையே.. **

நேற்றிரவு முழுதும்,
விடாது கொட்டி தீர்த்த,
மழையை,
என் சன்னல் வழியே,
வேடிக்கை பார்த்து,
உறங்க மறந்து போனேன்..

நிசப்தம் கிழித்து,
சோவென்று பெய்த,
பெருமழையின் சாரல்கள்,
சன்னல் தாண்டி,
என் உடலை தீண்ட,
சிலிர்த்தேன்..

காதல் வயப்பட்ட,
மனது வேறு,
இன்னும் அழகாய்,
ரசனையாய்,
மழையை ரசிக்க
வைத்தது..

விடியலுக்கு சற்று முன்,
மழை நின்று போக,
ஏனோ மனமும் வாடி
போனது..

ஒரு வேகத்தில் எழுந்து,
இருள்பிரியா அதிகாலை,
பொழுதில்,
ஈரமாய் நனைந்த வீதியில்,
மழையின் மிச்சமாய்,
சிறு மழைதுளிகள் எனை நனைக்க,
ஆனந்த நடனமிட்டேன்,

"மழையே மழையே மீண்டும்,
ஒரு இரவில் வா..
நான் மகிழ்ந்திருக்க வேண்டும்.. "
மழை கவிதைகள் ,
பிறப்பெடுக்க ஆரம்பித்தன,
என்னுள்,..

** மழை **


*
அடை மழையில்,
கரைந்து நனைகிறது,
வறுமை..

*
விடாது கொட்டி தீர்த்த,
மழைக்கு பலி,
ஏழை மக்கள்..

*
விடிய விடிய,
பெய்திட்ட மழையை,
ஒற்றை சன்னல் வழியே,
தனிமை சூழ,
வெறித்தேன்...

*
மழையில் நனைதல்,
பால்யத்தில் கொண்டாட்டம்,
இளமையில் தித்திப்பு,
இளமை தாண்டிய பின்,
துயரம்..

*
இளமை சூழ,
அன்று ரசித்த மழையை,
இன்று,
தனிமை சூழ,
வெறுத்தேன்..

*
அடர் வனத்தில்,
அடர்ந்த மழையில்,
நனைந்து
பிறிதொரு நாளில்
இறப்பேன்..

காதல் வெளி

காதல் வெளிதன்னில்,
அவள் மனதை,
இறுக பற்றி கொண்டேன்..
காதல்,
சிலிர்த்தது வெகு நேரம்,
அந்த வெளியெங்கும்.. 


**
உனக்காக காத்திருக்கையில்,
இந்த விஸ்தாரமான,
பச்சை புல்வெளியின்,
நிசப்தம் கூட,
காதல் பேசுகிறது,
என்னில்.


**
தூர தெரிந்த,
இரு விண்மீன்களில்,
நான் ஒன்றாய்,
நீ ஒன்றாய்,
கண்சிமிட்டும்,
நம் காதல் கனவுகள்,
இதம்.. பெண்ணே.


**
பிரபஞ்ச வீதியில்,
நட்சத்திர குவியல் நடுவே,
நிசப்தம் பூசி,
தனித்திருக்கிறேன்...
காதல் செய்வோம்,
வா.. பெண்ணே..

**
ஏதோ ஒரு தெய்வம்,
என் மனதை,
மிக சரியாக புரிந்து,
என் வேதனை தீர்க்க,
உன்னை அனுப்பி,
இருக்கிறது,
அன்பு தோழியாக..


**
மெல்ல நீ,
விடை பெறுகையில்,
என் கனவுகள்,
தீர்ந்து,
விடியலும் துவங்கி விடுகிறது.


**
உன் மீது விழுந்து,
சிதறும்,
மழை துளிகளோடு,
நானும்,
பரவசமாய் சிதறுகிறேன் .. 

**
சில வினாடிகள்
மழை நின்று,
பெய்தது..
அவள் சாலையை,
கடந்து சென்றாள்..

சபிக்கப்பட்டவன்


சில நேரங்களில்,
விசித்திரமாய் தோன்றும்,
வானம் போல,
இந்த காதலும்..

எழுத எழுத,
தீராது காதல் வரிகள்,
தொடர்ந்து பிறப்பெடுத்து,
கொண்டே இருக்கின்றன..

இத்தனைக்கும்,
எழுதுபவன் காதல்,
தீண்டாதவனாய்,
இருந்தும் கூட..

எனக்கும் கூட,
வேடிக்கையாக இருக்கிறது,
பல சமயங்களில்,
என் காதல் வரிகளை,
நினைத்தால்..

இந்த பிறவியில்,
எனக்கு சபிக்க ப்பட்டது,
கற்பனை காதலே,
என்று முழுதாய்,
உணர்ந்து கொண்டேன்,
இளமை தீர்ந்த பின்னே..

புதன், 10 டிசம்பர், 2014

வெள்ள சிதறல்கள்..

ஆற்றங்கரையோரம்,
வழிந்தோடுகிறது,
வெள்ள சிதறல்கள்..


*
வெப்பம் தீண்ட,
துவங்கிய பொழுதில்,
அச்சம் குடி,
கொண்டது..

*
உணர்விழந்த நிலையில்,
நிசப்த உறக்கம்,
அவ்வப்பொழுது..

*
கனவுகளை ஆழ,
புதைத்து,
நிதர்சனங்கள்
குடியேறி விடுகின்றன..

*
எதற்கோ எங்கோ,
விரையும் சர்ப்பம்,
கண்டு,
உயிர் உணர்கிறது,
மனது.

*
பனி படர்ந்த,
விடியலில்,
குளிர்ந்த குளத்தில்,
முழுக்கவே,
நனைந்து விடுகிறது..

*
ஒற்றை அறையின்,
ஒரு மூலையில்,
எங்கோ வெறித்தபடி,
நிதர்சன நாட்களை,
நகர்த்துகிறது, மனது..

*
சூழல் வெப்பத்தில்,
சிக்கி,
தகிக்கிறது,
சமீபமாய்..

*
எனக்கு நெருக்கமாய்,
என்னை விட்டு வெகு,
தூரமாய்,
அவ்வப்பொழுது,
வேடிக்கை காண்பிக்கிறது,
மனது..

ஆழ்துயிலில் சில காலம்..

இடைவெளியின்றி,
ஆழ்துயிலில்
சில காலம்.. 


*
விரக்தி,
சப்தமின்றி,
வீழ்த்தியது..

*
அவ்வப்போது,
பின்னிரவு தனிமையில்,
விழியோரம் எட்டி பார்க்கும்,
கண்ணீர் துளிகள்,
மனதின் வலியிலிருந்து,
புறப்பட்டவை..

*
உணர்வுகள்
மரத்த நிலையில்,
இளமை விடைபெற்றது..

*
அறிவுரைகள்
அள்ளி தெளிக்கிறார்கள்,
நஞ்சு மனதிலிருந்து..
*
இனி,
மெல்ல நகர்ந்து,
முற்றும்..
தகர்ந்தது,
கனவு கோட்டைகள்..
*
கரைந்து போன,
நாட்கள்,
கனவுகளில்,
உயிர்த்துடிப்பாய்..

*
இப்போதைக்கு,
என் உற்ற நண்பனாய்,
என் மழலை..

**
வீழல்,
வீட்டில் கூட,
தனிமை..

**
உலகம் இருக்கிறது.
சமூகம் இருக்கிறது.
உறவுகள் இருக்கிறது..
எங்கோ தொலைவில்,
முகநூல் நட்புகள் இருக்கிறது..
ஆனாலும்,
நான் மட்டும் தனியே..

நீந்தி பெருங்கடலை கடந்த, பின்னே...


*
சிதைந்த மனது,
தேடுவது,
ஒரு ஆறுதலை..


*
வெகு காலம்,
கழிந்த ஒரு நாளில்,
அவளை சந்தித்தேன்..
மௌனங்கள் பேசி,
விடைபெற்றன மீண்டும்.

*
என்
இறுதி யாத்திரை,
அவள் பூத்தூவலில்,
சிறக்கும்

*
விரக்தி,
வீணடிக்கும்,
நாட்களை..

*
சிதைந்த மனது,
மீண்டு வருதல்,
மிக கடினம்,
என்றாலும்,
மீளத்தான் வேண்டும்

*
அதிகார மனிதர்கள்,
அநீதி இழைக்கிறார்கள்,
பாமரர் உலகிற்கு..

*
வறுமை தீண்ட,
துவங்குகையில்,
சமூகம்,
உறவுகள்,
வெறுப்புடன் பார்க்க,
துவங்கும்..

*
பேச தெரியவில்லையாதலால்,
வெற்றி கிட்டவில்லை..

*
ஒரு வழியாய்,
இளமை தீர,
துவங்கிய பொழுதில்,
மெல்ல,
தனித்து விடப்பட்டேன்..

*
அவசர தேவை,
ஓர் பேரமைதி..

*
நீந்தி
பெருங்கடலை கடந்த,
பின்னே,
முற்றும்..

** என்னிலிருந்து.. சில வரிகள்

*
மெல்ல தொலைந்தது,
அழகிய ஓவியங்கள்..
கீழ்வானம் இருண்டது..

*
விரக்தி மனதில்,
அவ்வப்போது,
அழகிய கனவுகள்..

*
சுடும் பாலை,
ஒன்றின் மீது,
வெற்று காலில்,
எங்கோ பயணம்..

*
எதிர்பாரா ஒரு கணத்தில்,
தொடரும் பயணம்,
முற்றும்..

*
தொடர்ந்த பழி சொற்கள்,
சுமக்கிறான்,
மிகுந்த நல்லவன்..

*
காதல் என்றொரு
மாயை ,
இளமை தீர்கையில்,
விலகி செல்கிறது.

*
தீரா சுமையில்,
அழகிய நட்பு
புலப்படும்..

*
பிறிதொரு நாளில்,
செல்வம் நிறைய,
சேர்த்த பின்னே,
இந்த மாபெரும் தேசத்தை,
குறுக்கும் நெடுக்குமாய்,
ஆசை தீர சுற்றி
வருவேன்..

*
சடசடவென,
சரிந்து விழுந்தது,
நூற்றாண்டு பல கண்ட,
பெரும் மரம் ஒன்று..
சூறாவளி,
வலியது.

வரிகள்..

எங்கு தொடங்கியதோ,
எவனுக்கும் தெரியாது..

எங்கு முடியுமோ,
அதுவும் தெரியாது..,

பிரபஞ்சம்,
ஒரு மாய புதிர்..

**

திருநாள் வரும்,
தொலைவில் இல்லை..
நம்பிக்கை,
மெல்ல என் வறட்சியின்,
மீது,
மழைத்துளி ஒன்றை,
தெளித்து செல்கிறது..


**
களவு போன,
இறந்த காலம்,
இனி,
கனவுகளில்,
தொலைந்து போகும்..

**
கவனமாக இருக்கிறேன்,
கவனம் சிதைந்த,
பிறகு..

**
நாளைய கனவுகள்,
இனித்தது,
அற்றை காதல்,
நாட்களில்..

**
விடைபெற்ற பின்னே,
கனவுகளில்,
கரைந்திடுவேன்..

**
 

** மனது பேசுகிறது..**


ஒற்றை நிசப்த,
அறையை தாண்டி,
எங்கோ தொலைவில்,
ரீங்காரமிட்டு,
ஆடி பாடி மகிழ்கிறது,
இவன் மனது,
பின்னிரவு பொழுதுகளில்..

**
மரணம்,
என்றொரு இயற்கை,
அதிகார மனிதனின்,
ஆணவத்தை,
சற்றே குறைக்கிறது..

**
கனவுகள் தீர்ந்த,
பொழுதில்,
முற்றாய் விடிந்திருந்தது..

**
அவ்வப்போது,
சோழ தேசத்து,
இளவரசனாக,
புழுதி பறக்க,
புரவியில் விரைவேன்,
எங்கோ,
என் கனவுகளில்..

**
அறிந்தும்,
அறியாதது போல,
நடிப்பதற்கும்,
திறமை வேண்டும்..

*
வெற்று சுவற்றில் ,
இரவுகளின் தனிமை,
எதிரொலிக்கிறது.

*
எங்கோ தொலைவில்,
திரிகிறேன்..
அருகாமை ,
வசப்படும் பிறகொரு,
நாளில்..