ஞாயிறு, 4 அக்டோபர், 2015

** கனவு உலா..**

*
அழகான பாரீஸ் நகர,
வீதிகளில், 
பேரழகான பெண்ணோடு,
ஆண்மை துளிர்க்க,
காதல் உலா....

நிறைவேறா கனவுகளில்,
சஞ்சரிக்கிறேன்,
என் பின்னிரவுகளின்,
ஆழ்ந்த உறக்கத்தில்..

**
இந்த கனவுகளில்,
நான்,
மிக உயர்ந்த சிம்மாசனத்தில்,
பேராற்றலோடு,
வீற்றிருக்கிறேன்...
என்னருகே,
பெரும் ராஜ்யத்தின்,
பேரழகான ராணி..

**
பல பல நூற்றாண்டுகளுக்கு,
முன்,
வெண் புரவி ஒன்றின்,
மீதேறி,
மங்கோலியா நாட்டில்,
புழுதி பறக்க,
விரைந்து கொண்டிருக்கிறேன்..
நான்,
செங்கிஸ்கானின்,
போர் படை தளபதி..

**
மாசிடோனியாவில்,
இரவு விருந்தில்,
நானும்,
உலகை வென்ற மாவீரன்,
அலெக்ஷாண்டரும்,
உற்சாகமாய் பேசி,
கொண்டிருந்தோம்..
நிலவும் ,
விண்மீன்களும்,
ஆர்பரித்தன..

**
பால்ய வயதில்,
பேரன்பை பேசி,
மறைந்த,
அற்றை நாட்களின்,
பெரியவரோடு,
அளவளாவி கொண்டிருந்தேன்,
எதுவென்று இனம் காண,
முடியா ஒரு தேசத்தில்..
**
தீரா வேதனையில்,
உறக்கமின்றி,
தவித்த என்னை,
அணைத்து,
அறிவுரை கூறி,
அமைதியாய் உறங்க வைத்தார்,
காமராஜர்..
நான் ஆழ்ந்து,
உறங்கி போனேன்..

சனி, 20 ஜூன், 2015

தொலைந்தே போகிறேன்

கவி என நினைத்து
கவி பல எழுதி
தள்ளுகிறேன்,
வறுமை சூழ
விக்கித்து நின்ற
பொழுதிலிருந்து..


**
மீண்டும் துவக்க
புள்ளியில்
நிற்கிறேன்.

காலம் ஒரு
அசத்தலான
கடவுள்..


**
தரித்திரம் சூழ்ந்தது,
இரக்கம் கொண்டவனிடத்தில்..


**
அமைதியாய் ஒரு
வாழ்க்கை அமைந்த
பின்னே,
கடவுள் மீது
கவனம்..


**
எதுவுமற்று
யாருமற்று..
வேறொன்றுமில்லை..


**
தொலைந்தே போகிறேன்..
கரிய வானம்
இருண்டு போகட்டும்.


**
எங்கே நகர்கிறது,
அல்லது
நகர்கிறோம் ??


**
மனது
கதறுகிறது.. 


நிசப்தமாய்
நகர்ந்தது
வானம்..


கற்றல் உணர்ந்தேன்.

சில நாட்களாய்
என் பகலும்
இரவும்
அசைவற்று
கிடக்கின்றன.


**
என் அடர்ந்த
மௌனத்தின் பின்னே,
புதைந்திருக்கிறது
ஆழ்மன ரகசியங்கள்..


**
கடல்..
பேரிரைச்சலோடு,
கனத்த மௌனமும்
சேர்த்து
என்னுள் எதையோ,
எடுத்துரைக்க முயல்கிறது.


**
தேவையற்று போனதாய்
நினைத்த வினாடியில்,
இருந்து,
உற்சாகம் கொண்டேன்..


**
ஒவ்வொன்றாய்
இழந்தேன்.

கற்றல் உணர்ந்தேன்..
 

**
சில இடைவெளிக்கு பிறகு,
ஒவ்வொரு முறையும்
உருமாறித்தான்
போகிறேன்..


**
எனக்கான காலம்
ஒன்று
கனவுகளில்
ஆர்ப்பரிக்கிறது..


**
எழுதுகிறேன்,
வான வீதியில்
உலவி கொண்டே..


**
நகர நகர
பழக்கமானது

 நரகம்

புதன், 8 ஏப்ரல், 2015

நினைவுகளில்..


உன் மௌனமே
போதுமென்று
கூறியும், 
பிரிவுதிர் காலத்தில்,
எனை விட்டு
சென்று விட்டது
ஏன் பெண்ணே ?

*
உன்னை தேடி,
நிதமும்,
திரிகிறேன்,
எங்கெங்கோ...

**
அழகிய உணர்வுகளில்,
ஆர்ப்பரித்த மனது,
இன்று,
எங்கோ வெறிக்கிறது..

**
எனக்கொரு
அழகிய கனவு
இருந்தது..
ஒரு பிரிவுதிர் நாளில்,
என்னிலிருந்து
விடைபெற்றது
கனவு..

**
என்னை நான்
தொடர் சமாதானத்தில்,
ஈடுபடுத்தியும்,
சொல் பேச்சு கேளா
மனது,
எங்கோ தேடி திரிகிறது,
உன்னை..

**
காதலன்றி
ஒரு வாழ்வியலை
எட்டி பிடித்தும்,
காதல் நினைவுகளின்றி,
வாழ்ந்திட
இயலவில்லை..

**
யார் என்ன சொன்னாலென்ன,
காதல் சாகாது
என்றவள்,
மெல்ல காணாமல்
மறைந்து போனாள்..
*
பளிச்சென்று இன்னமும்,
என்
நினைவுகளில் இருக்கிறது,
உன் வட்ட முகமும்,
படபடத்த உன் விழிகளும்..

**
கடற்கரையில்
கடல் நீர் கால் நனைக்க,
வானம் வெறித்து,
கிடக்கிறேன்..
அமைதியாய் வேடிக்கை,
பார்க்கிறது,
முழு நிலவு..

**
எதுவோ,
என் வாழ்வும்
ஒரு நாள் தீர்ந்து,
கல்லறையில் முடியும்..
உன் நினைவுகளை,
சுமந்து,
என் கல்லறை
உறங்கி கொண்டிருக்கும்..