வியாழன், 11 டிசம்பர், 2014

காதல் வெளி

காதல் வெளிதன்னில்,
அவள் மனதை,
இறுக பற்றி கொண்டேன்..
காதல்,
சிலிர்த்தது வெகு நேரம்,
அந்த வெளியெங்கும்.. 


**
உனக்காக காத்திருக்கையில்,
இந்த விஸ்தாரமான,
பச்சை புல்வெளியின்,
நிசப்தம் கூட,
காதல் பேசுகிறது,
என்னில்.


**
தூர தெரிந்த,
இரு விண்மீன்களில்,
நான் ஒன்றாய்,
நீ ஒன்றாய்,
கண்சிமிட்டும்,
நம் காதல் கனவுகள்,
இதம்.. பெண்ணே.


**
பிரபஞ்ச வீதியில்,
நட்சத்திர குவியல் நடுவே,
நிசப்தம் பூசி,
தனித்திருக்கிறேன்...
காதல் செய்வோம்,
வா.. பெண்ணே..

**
ஏதோ ஒரு தெய்வம்,
என் மனதை,
மிக சரியாக புரிந்து,
என் வேதனை தீர்க்க,
உன்னை அனுப்பி,
இருக்கிறது,
அன்பு தோழியாக..


**
மெல்ல நீ,
விடை பெறுகையில்,
என் கனவுகள்,
தீர்ந்து,
விடியலும் துவங்கி விடுகிறது.


**
உன் மீது விழுந்து,
சிதறும்,
மழை துளிகளோடு,
நானும்,
பரவசமாய் சிதறுகிறேன் .. 

**
சில வினாடிகள்
மழை நின்று,
பெய்தது..
அவள் சாலையை,
கடந்து சென்றாள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக