புதன், 10 டிசம்பர், 2014

ஆழ்துயிலில் சில காலம்..

இடைவெளியின்றி,
ஆழ்துயிலில்
சில காலம்.. 


*
விரக்தி,
சப்தமின்றி,
வீழ்த்தியது..

*
அவ்வப்போது,
பின்னிரவு தனிமையில்,
விழியோரம் எட்டி பார்க்கும்,
கண்ணீர் துளிகள்,
மனதின் வலியிலிருந்து,
புறப்பட்டவை..

*
உணர்வுகள்
மரத்த நிலையில்,
இளமை விடைபெற்றது..

*
அறிவுரைகள்
அள்ளி தெளிக்கிறார்கள்,
நஞ்சு மனதிலிருந்து..
*
இனி,
மெல்ல நகர்ந்து,
முற்றும்..
தகர்ந்தது,
கனவு கோட்டைகள்..
*
கரைந்து போன,
நாட்கள்,
கனவுகளில்,
உயிர்த்துடிப்பாய்..

*
இப்போதைக்கு,
என் உற்ற நண்பனாய்,
என் மழலை..

**
வீழல்,
வீட்டில் கூட,
தனிமை..

**
உலகம் இருக்கிறது.
சமூகம் இருக்கிறது.
உறவுகள் இருக்கிறது..
எங்கோ தொலைவில்,
முகநூல் நட்புகள் இருக்கிறது..
ஆனாலும்,
நான் மட்டும் தனியே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக